தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Must read

சென்னை:
மிழகத்தில், 23 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள்ளது,

இதுமட்டுமன்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article