சென்னை: ரங்கநாதன் தெருவில் ஏற்படும் மக்கள் நெரிசலை தவிர்க்க மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்துக்கு இரும்பினாலான நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இந்த நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகள், மற்றும் ரயில் நிலையத்துக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் ரங்கநாதன் தெருவையே பயன்படுத்தி வருவதால், கடுமையான மக்கள் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில், மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து, தி.நகர் பேருந்து நிலையிம் வரை இரும்பிலான நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. ரூ.27.05 கோடியில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த பணிகள் தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளது. இதையடுத்து நடை மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.