சென்னை: அடுப்பு பற்ற வைக்கும் அடிப்படை தேவையான, தீப்பெட்டியின் விலை சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 1ந்தேதி முதல் விலை ரூ.2 ஆக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், அனைத்து வகையான பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, வாகன கட்டணங்கள் என அனைத்தும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன.

இந்த நிலையில், தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலம்பொருட்களும் கடுமையா உயர்ந்துள்ளதால், அதன் விலையை உயர்த்த தீப்பெட்டி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, டிசம்பர் 1ந்தேதி முதல் ஒரு தீப்பெட்டியின் சில்லரை விலை ரூ.2 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த அறிவிப்பை  அகில இந்திய தீப்பெட்டிகள் சம்மேளனம் (All India Chamber of Matches ) அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளன குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு  தீப்பெட்டியின் விலை50 பைசாவில் இருந்து ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது.  அதைத்தொடர்ந்து தற்போதுதான் (2021) தற்போது தீப்பெட்டியின்   விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன. அதனப்டி, 2021ம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல்  விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.