சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பு இன்று முதல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

150 ஆண்டுகால பழமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக குரல் அறிவிப்பு ஏதும் இல்லாத ‘சைலன்ட் ஜோன்’-னாக மாற்றும் முயற்சியை தென்னக ரயில்வே கடந்த 26-2-2023 முதல் அறிமுகம் செய்தது.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ளது போல் பெயர்பலகைகள் மூலமும், பிரெய்லி வழிகாட்டி தகவல் பலகைகள் வாயிலாகவும் அறிவிப்பு செய்து வந்தது.

இந்த நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளானதை அடுத்து இந்த முயற்சியை தென்னக ரயில்வே இன்று முதல் கைவிட்டுள்ளது.

இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் குரல் அறிவிப்பு ஒலிக்கத் துவங்கியுள்ளது.

குரல் அறிவிப்புக்கு விடைகொடுத்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்