சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய வைட்டமின் டி மாத்திரைகள்

Must read

சூரிய ஒளி வைட்டமின் என்றழைக்கப்படும் வைட்டமின் டி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமானது, அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு அமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவாகச் சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது வைட்டமின் டி தோலில் உருவாகுவதால், பல பேருக்கும் குளிர் காலத்தில் வைட்டமின் டி அளவு குறைந்துவிடுகிறது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், உணவு வைட்டமினால் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது.
ஆனால் இங்கிலாந்து பொது சுகாதார துறை (PHE), தொற்று பற்றிய தரவிலிருந்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று கூறினாலும் அது கூடுதல் வைட்டமிங்களை பரிந்துரை செய்கிறது. இவை மேம்படுத்தப்பட்ட எலும்பு மற்றும் தசை வலிமைக்காக எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர்.

கூடுதல் மருந்துகளைப் பயன்படுத்தி தொற்று நோய்களைத் தடுக்க நடத்தப்பட்ட சோதனைகளில் பல வகையான முடிவுகள் வந்துள்ளது, அதனால் ஆராய்ச்சியாளர்கள் 11,321 மக்கள்மீது நடத்தப்பட்ட 25 தனி சோதனைகளின் தரவை ஒன்றிணைத்து ஒரு உறுதியான முடிவைக் கொடுக்க முயன்றனர்.

லண்டன் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் (QMUL) அணி, நிமோனியா காய்ச்சல், சளி, காய்ச்சல் போன்ற பல பரவலான நோய்களை உள்ளடக்கும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளைக் கவனித்தது.

ஆய்வு முடிவில், வைட்டமின் டி கூடுதல் மருந்துகள் உட்கொள்ளும் 33 நபர்களில் ஒரு நபராவது நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது காய்ச்சல் (ஃப்லு) தடுப்பூசியைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனெனில் ஒருவருக்கு காய்ச்சல் வராமலிருக்க 40 பேருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் ஜலதோஷத்தை விடக் காய்ச்சல் (ஃப்லு) தீவிரமானது.
மேலும் மாதாந்திர அதிக அளவு மாத்திரைகள் சாப்பிடுபவர்களைக் காட்டிலும் தினசரி அல்லது வாராந்திர மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் தான் அதிகம் பயனடைந்தனர், மற்றும் ஆரம்பத்திலிருந்தே குறைபாடுள்ளவர்கள் தான் வெகுவாகப் பயனடைந்தனர்.

ஏன் வைட்டமின் டி முக்கியம்?
ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் பராமரிப்பிற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றின் அளவை ஒழுங்குமுறைப்படுத்துவது தான் வட்டமின் டி யின் முக்கியமான செயல்பாடு.
தீவிர நிகழ்வுகளில், குறைந்த அளவு வட்டமின் டி குழந்தைகளில் ரிக்கட்ஸ் எனும் நோயை ஏற்படுத்தலாம். அதில் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாகவும் பலவீனமாகவும் அவர்கள் வளரும்போது உருவமற்றதாகவும் மாறிவிடும்.
பெரியவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடு எலும்புமெலிவை (ஆஸ்டியோமலேசியா) ஏற்படுத்தலாம். இதனால் அவர்களுக்குக் கடுமையான எலும்பு வலி மற்றும் தசை வலிகள் ஏற்படும்.

ஆனால் ஒரு சமநிலை உள்ளது – அளவுக்கதிகமான வைட்டமின் டி இரத்தத்தில் அதிக அளவு கால்சியத்தை ஏற்படுத்தக்கூடும், இது இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

இதனால் யாரேனும் நீண்ட காலமாகப் பாதிக்கப்படிருந்தால் அல்லது மருந்துகள் எடுத்து கொண்டிருந்தால் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அட்ரியன் மார்டினா, “65 மில்லியன் இங்கிலாந்து மக்கள் தொகையை அனுமானித்து, அதில் 70% பேர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு கடுமையான சுவாச நோய்த்தொற்று இருந்து, பின்னர் அவர்கள் தினசரி அல்லது வாராந்திரம் வைட்டமின் டி கூடுதல் மருந்துகள் உட்கொண்டால், வெறும் 3.25 மில்லியனுக்கும் குறைவான மக்களுக்குத் தான் ஒரு கடுமையான சுவாச நோய்த்தொற்று ஒவ்வொரு ஆண்டும் வரும்”, என்று கூறினார்.

ஏற்கனவே PHE எல்லோரையும் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகளுக்காக இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் வைட்டமின் டி கூடுதல் மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுரை செய்துள்ளது.

PHE யின் ஊட்டச்சத்து அறிவியல் தலைவர் பேராசிரியர் லூயிஸ் லெவி, கூறுகையில்: “வைட்டமின் டி மற்றும் நோய்த்தொற்றுக்கான ஆதாரங்கள் சீரற்றதாக உள்ளது, மற்றும் இந்த ஆய்வு, சுவாச பாதை நோய்த்தொற்ருகலுக்கான ஆபத்தை வைட்டமின் டி குறைக்கிறது என்று பரிந்துரை செய்ய போதுமான ஆதாரங்கள் வழங்கவில்லை.”
ஆனால் பர்மிங்காம் பல்கலைக்கழகம் மற்றும் என்டோகிரினாலஜி சொசைட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்ட்டின் ஹெவிசன், ஆய்வின் முடிவுகள் மிகவும் “அபாரமாக” இருந்தது என்று கூறினார்.

இறுதியில், QMUL ன் ஆராய்ச்சியாளர் குழு, அமெரிக்கவில் வலுவூட்டப்படும் பால் போலவே இங்கிலாந்திலும் வைட்டமின் டி உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்கின்றனர்.

பேராசிரியர் மார்டினா “உணவுகளில் வைட்டமின் டி யின் வலுவூட்டல், ஒரு நிலையான, குறைந்த அளவு வைட்டமின் டி உட்கொள்ளுதலை வழங்கிக் கிட்டத்தட்ட பல நாடுகளில் வைட்டமின் டி குறைபாட்டை நீக்கியுள்ளது என்று கூறினார்.
“வைட்டமின் டி யின் இந்தப் புதிய நன்மையை விளக்கி, வைட்டமின் டி குறைபாடு அதிகம் காணப்படும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைட்டமின் டி அளவுகளை மேம்படுத்த, உணவு வலுவூட்டலை அறிமுகம் செய்வதற்கான காரணத்தை எங்கள் ஆய்வு உறுதிப்படுத்துகிறது” என்று QMUL ன் ஆராய்ச்சியாளர் குழு கூறியுள்ளது.

 

More articles

Latest article