டிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோலி-2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்த சண்டக்கோழி படம் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.

அதைத்தொடர்ந்து சுமார் 13 வருட இடைவெளிக்குப்பின் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம், சண்டக்கோழி-2  என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வந்தது. இதில் விஷாலுக்கு ஜோடியாக  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண் விஷாலின் அப்பாவாக நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார் படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே, இந்த பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் விஷாவின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைலரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=-yiOPr8EFfc