சென்னை:

ழம்பெரும் நடிகை மறைந்த சாவிரித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இளம் இயக்குனர் அஸ்வின் நாக் இயக்கி உள்ளார்.

இந்த படம் நேற்று வெளியானது. படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பாராட்டுக்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது.< பல முன்னணி நட்சத்திரங்கள் கீர்த்தி சுரேசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், படத்தை பார்த்த நடிகர் கமலஹாசனும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை நேரில் வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.

கமலுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.அதில் கமலின் ஆசிர்வாதம் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், தனது அம்மாவை போலவே திரையில் தோன்றியதாக கூறி கீர்த்தி சுரேஷுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.