சென்னை:

டிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திர படம் வெளியிடக்கூடாது என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள விஷாலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உயர்நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்து, படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், இரும்புதிரை திரைப்படம் வெளியிட கூடாது என இந்து அமைப்பினர்  தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலின் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக நடிகர் விஷால் இல்லத்திற்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.