நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் அண்மையில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருந்தார். அதே படத்தை ஹிந்தியில் மஹாராஷ்டிராவில் வெளியிட தம்மிடம் லஞ்சம் கேட்டதாக அவருடைய ஆதங்கத்தை, அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழல் தவறானது. அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக மும்பை அரசு #CBFC அலுவலகங்களில் மோசமாக ஊழல் நடக்கிறது. எனது #மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம் என்று 2 பரிவர்த்தனைகளாக கொடுத்திருக்கிறேன். எனது வாழ் நாளில் இப்படி ஒன்றை சந்தித்ததில்லை.
இன்று திரைப்படம் வெளியாகவேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் #மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை. இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா??? கிடையாது. அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரம் இதோ. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் செய்த பரிவர்த்தனையின் விவரத்தையும் கொடுத்துள்ளார் –

3 Lakhs sent to –
M. RAJAN
AC No. 168100050300500
Tamilnad Mercantile Bank Ltd
Sion Branch
IFSC CODE – TMBL0000168

3.5 Lakhs sent to –
JEEJA RAMDAS
AC No. 7712615683
Kotak Mahendra Bank
Andheri East Branch
IFSC CODE – KKBK0000651