மேஷம்

சிறந்த முயற்சியும், அதிக உழைப்பும் கொண்டு காரியங்களில் வெற்றி பெறுவீங்க. பயனுள்ள செலவுகளுக்கு, பண வரவுகள் உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பொறுப்புகள் கிடைக்கும். சகப் பணியாளர்களின் ஆதரவுடன் பணிகளில் ஈடுபட்டு பாராட்டுப் பெறுவீங்க. சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து மகிழ்வாங்க. இந்த வாரம் ஒய்ஃப் மற்றும் குழந்தைங்களோட சேர்ந்து வாழ்க்கை ஹாப்பியா கழியும். புனித காரியங்களில் ஈடுபடுவீங்க. அரசாங்க உத்தியோகம் தேடிக்கிட்டிருந்தவங்களுக்கு அது கெடைக்க சான்ஸ் இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப் செய்வாங்க. அதிகாரம் உள்ள பதவிகள்  கிடைக்கும். ஃபாரின் பயணம் மற்றும் பிசினஸ் நல்லபடியா அமைஞ்சு அதன் மூலம்  தன லாபம் / இன்கம் அதிகரிக்கும். நீங்க சந்தோஷமா இருப்பதோடு மத்தவங்களையும் சந்தோஷப்படுத்துவீங்க.

ரிஷபம்

கூட்டுத்தொழிலில், பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அதிக வருமானத்தை ஈட்டுவீங்க. எதைச் செய்தாலும் கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுங்கள். குடும்ப வாழ்வு தொல்லைகள் இன்றி, சீராக நடந்து வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் புகழ் பெறுவர். பங்குச்சந்தை விறுவிறுப்பாக நடைபெறும். எடுத்த முயற்சி ஒண்ணு வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பட்.. செய்து முடிச்சுடுவீங்க. குடும்பத்துல ஒரு  செல்லப் பிராணி என்டர் ஆகக்கூடும். புதிய நபர்களோட தொடர்பு ஏற்படும். உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்து நட்பு கெடைக்கும். கணவர் / மனைவி மூலம் நன்மை ஒண்ணு கெடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வில தேர்ச்சி உண்டாகும். பேச்சுத் திறன் அண்ட்.. சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். குறிப்பாய் ஆபீசில் உங்கள் பேச்சால் ஆர்டர் கிடைத்து வெற்றி பெறுவீங்க.

மிதுனம்

நண்பர்கள் ஒத்துழைப்புடன் முன்னேற்றமான பலன்களைப் பெற முற்படுவீங்க. செலவுகளைச் சந்தித்த பின்னரே வரவுகள் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். தவறுகளைச் செய்துவிட்டு அதிகாரியின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். சகப் பணியாளர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிச்சுமை காரணமாக, குறிப்பிட்ட காலத்தில் வேலைகளை செய்து கொடுக்க இயலாமல் போகலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். லாபம் கொறையாது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு ஹாப்பினஸ் அதிகரிக்கும். பெரியவங்க ஆசியால நீங்க எடுக்கற எல்லா முயற்சிங்களும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

கடகம்

வேலைப்பளுவால் ஓய்வு நேரம் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், போட்டிகளைத் தவிர்க்க புதிய யுக்தியைக் கையாள்வீங்க. குடும்பத்துல, எதிர்பாராத விருந்தினர் வருகை, செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் கால நேரம் பாராமல் பணியாற்றுவாங்க. மகான்களோட ஆசியும், புதிய தொடர்பு களால் நன்மைகளும் ஏற்படும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக பெஸ்ட்டாய்ச் செய்து முடிப்பீர்கள்.  கவர்ன்மென்ட் வேலைக்கு மனு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் வரும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை சூப்பர் வாரமா இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிங்க வசூலாகும். ரிலேடிவ்ஸ், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் சின்னச் சின்ன உதவிங்க கெடைக்கும்.

சிம்மம்

அவசரமும், அவசியமும் கொண்ட பணிகளை விரைவாக செய்து கொடுத்து பாராட்டு பெறுவீங்க. அரசு பதவியில் உள்ளவங்க பயன் பெறுவாங்க. காத்திருந்த சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். ஆபீசில் பேச்சுத்திறன் ஆதாயம் தரும்.  எடுத்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெற, அதிக முயற்சி தேவைப்படும். தகுந்த நபர் இல்லாத காரணத்தால், சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் நன்மைகள் நடைபெற சிறிது பொறுமையோடு இருப்பது நல்லது. நிறுத்தி வைத்த வேலைகளை முடிக்க உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கக் கூடும். நீங்க அதை அநாயாசமாய்ச் செய்து முடிச்சு நிம்மதிப்பெருமூச்சை வெளிப்படுத்திப்புன்னகைப்பீங்க. பணவரவு அதிகரிப்பது போல், செலவுங்களும் கூடும். மனக் கவலைகள் சிலது இருந்தாலும் குடும்பத்துல உள்ளவங்களோட அன்பான அரவணைப்பு அதையெல்லாம் குறைக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது உங்கள் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக் இருங்கள்.

கன்னி

சொந்தத் தொழிலில் ஈடுபடுபட்டிருக்கறவங்க, பழைய வாடிக்கையாளருக்கு புதிய வேலைகளை விரைவாகச் செய்து கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகலாம். பங்குதாரர்களின் அனுகூலத்தால் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்திற்கு நலம் தரும் செய்திகள் வந்துசேரும். கடன்கள் அடைபட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சிரமங்கள் உண்டாகலாம். கலைஞர்கள், தொழிலில் வளம் காண நண்பர்களின் மூலம் முயற்சிகளை மேற்கொள்வாங்க. தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள்  முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்ப சுமைகளை ஒருசேர சுமப்பதில் சிரமம் ஏதும் இல்லை என்பர். வியாபார விரிவாக்கம் பற்றி உங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்று சக்ஸஸ் பார்ப்பீங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது உங்கள் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக் இருங்கள்.

துலாம்

சிறு சிறு தடைகளை சமாளிக்க நேரிடும். மனதில் இனம் புரியாத குழப்பமும், செயல்களில் தடுமாற்றமும் காணப்படும். உத்தியோகஸ்தர்கள், பணிகளில் கவனமாகவும், நிதானமாகவும் செயலாற்றுவது நல்லது. சகப் பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதனால டென்ஷனோ, கஷ்டமோ பயமோ வராதுங்க. வீட்ல அமைதியும் நிம்மதியும் சிறப்பானதா இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலா செல்லும் சான்ஸ் ஏற்படும். வெற்றியும், அரசுத் துறையால் லாபமும் கெடைக்கும். சிலருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்பட சான்ஸ் உண்டு. வீட்டுல நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது உங்கள் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக் இருங்கள்.

விருச்சிகம்

வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். கூட்டுத்தொழில் செய்யறவங்க பணியாளர்களிடம் கனிவு காட்டி,  தட்டிக்குடுத்து வேலை வாங்கி வெற்றிபெறுவீங்க. குடும்பத்துல சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். கணவன் -மனைவிக்குள் அனுசரணை அவசியம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் போதிய வருமானம் இருக்காது. இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வீக்.  உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. நீங்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமா வந்துக்கிட்டே இருக்கும். தடைகளை உடைச்சுக்கிட்டு ஏற்றமான பலன்களைப் பெற முயற்சி மேற்கொள்வீங்க. சுறுசுறுப்புடன் செயல்படறீங்க.. அதனால புதிய பொறுப்புகள் தேடிவரும். உத்தியோகத்துல பொறுப்புகள் அதிகமாகும். உயரதிகாரியின் விருப்பப்படி முக்கிய வேலையை செய்து பாராட்டுப் பெறுவீங்க.

தனுசு

கவர்மென்ட் கிட்டேயிருந்து ரொம்ப நாளா நாளாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு எந்த ஒரு காரியத்தைக் கையில் எடுத்தாலும் தடைகள் ஏற்படும். அதனால என்னங்க? சுலபமான செயல்களையும் கூட கடின உழைப்பிற்குப் பிறகு நிச்சயமா நிறைவேற்றி வெற்றி காண்பீங்க. சிரமங்கள் ஓரளவுக்குக் குறையும். அலைச்சல்கள் வெற்றி தருவதால மன நிம்மதி கூடும். நல்லவங்களோட பழகுவது நல்லதுங்க. பதவி, அந்தஸ்து உள்ளவங்க கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துக்குங்க. நீங்க ரொம்ப கவனமாய்ப் பார்த்துக்கு வேண்டிய விஷயம் உங்க ஹெல்த் தாங்க. அலட்சியம் செய்யாதீங்க. எடுத்த காரியங்களை சிறப்பாக முடிக்க, கடும் முயற்சி செய்வீங்க. பிரச்சினைகளை நிதானமாக அணுகுவது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணிகளில் சிறுசிறு தவறுகள் ஏற்படும். வரவேண்டிய கடன் தொகை, சிறிது தள்ளிப் போகலாம்.

மகரம்

சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளரின் அவசர வேலையை ஓய்வின்றிச் செய்து முடிப்பாங்க. கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவர். குடும்பத்துல ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை குடும்ப அங்கத்தினர்களே சமாளித்து விடுவாங்க. வேலைக்குப் போகும் பெண்கள் பயணங்களின்போது கவனமாக இருங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வர். இந்த வாரம் ஜாலியா… ஹாப்பியா.. ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்ல திருமணம் மாதிரியான மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.. விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். அதெல்லாம் ஒங்களுக்கு  ஜுஜூபி என்பதால் அநாயாசமாய் அதை ஃபேஸ் பண்ணிடுவீங்க.

கும்பம்

ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்த்துடுங்கப்பா. உயர் அதிகாரிங்ககிட்ட பேசும் பொழுது கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளரின் பணியை விரைவாக செய்து கொடுத்து பாராட்டு பெறுவீங்க. கூட்டுத்தொழில் செய்பவர்கள், தொழில் போட்டிகளைச் சமாளிக்க பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசிப்பீங்க. குடும்பத்துல பழைய கடன் தொல்லை தரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் சிலர் கடினமான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவாங்க. முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும் வாரம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பாங்க. மனதில் இருந்து வந்த சஞ்சல நிலை மாறும். தருமசிந்தனை உண்டாகும். எதுவுமே டிலே ஆகித்தான் சக்ஸஸ் ஆகும். குழந்தைங்க அனுசரிச்சுக்கிட்டு நெருங்குவாங்க.

மீனம்

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீங்க. குடும்பத்துல இருந்த பிரச்சினைகள் தீரும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில வெற்றி பெறக் கொஞ்சம் கடினமா உழைக்க வேண்டியதிருக்கும். ரொம்பவும் கஷ்டப்படறவங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதால் மனசுல நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நண்பர்களிடையே இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி வெள்ளைக்கொடி காட்டுவாங்க. நீங்க இறங்கிப்போக வேண்டியிருந்தாலும் பரவாயில்லைங்க. அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தாலும் டென்ஷன் இல்லாம டீல் செய்துடுவீங்க. பிரிஞ்சிருந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவீங்க. மிகவும் அன்பு செலுத்தும் பெண்களோட ஆதரவால் லாபம் ஏற்படும்.