RCB Vs LSG அணிகளுக்கு இடையிலான IPL போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் உள்ளூரில் விளையாடும் லக்னோ அணி வெற்றிபெறும் கனவுடன் களத்தில் இறங்கியது.

பேட்டிங்கில் சோபிக்காத ஆர்சிபி பௌலிங்கில் கில்லியாய் தனது திறமையை காட்டியது. இதனால் 7 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் எடுத்து திணறியது.

ஸ்டோனிஸ் மட்டும் நின்று விளையாடி 13 ரன்கள் எடுத்தார் 11 வது ஓவரில் அவரும் அவுட்டானதை அடுத்து லக்னோ வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். 108 ரன்களுக்கு ஆலவுட் ஆன லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோற்றது.

முன்னதாக லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின் LSG ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தை அதிர வைத்துள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து RCB ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்கை செய்த நிலையில், தற்போது விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ”அமைதியாக இருக்க வேண்டாம் இன்னும் சத்தம் எழுப்புங்க” என்பது போல் செய்கை காண்பித்தார்.

2013 ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது விராட் கோலியின் இந்த செய்கை கம்பீருடன் மீண்டும் மோதலுக்கு வழிவகுத்ததாக விமர்சிக்கப்படுகிறது.