கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சராக பதவியேற்ற உதயநிதி அறிவித்தார்.

இதனை அடுத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருந்த அதன் 54வது படத்தில் உதயநிதிக்கு பதிலாக விஜயசேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார் 2 அல்லது 3 மாதத்தில் இதன் படப்பிடிப்பை திட்டமிட்டுள்ள இந்த படக்குழு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.