டிகர் விஜய் அட்லி இயக்கத்தில்  நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

பல்வேறு சிக்கல்களை தாண்டி மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழ் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும்  தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஏற்கனவே மற்ற படங்கள் மாதிரி  மெர்சல் படமும் வெளியாகும் நாளன்றே இணையத்தில் வெளியிடுவோம் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,மெர்சல் படத்தை மூன்று நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என்ற முடிவு எடுத்திருப்பதாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் தங்களது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.