மெர்சல் விஜய்

சென்னை:

ரசு நிர்ணயித்த விலையிலேயே தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் அறிவித்திருந்தார்.

ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு ரூ. 1200 என்று அச்சிடப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து கேட்டால், “திரைப்பட நிறுவனம், தியேட்டர்களுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கும் ரசிகர் மன்றத்தினர், ரூ. 1200 என்று அச்சிட்டு விற்கிறார்கள்” என்று பதில் வருகிறது.

ஆனால் திரையரங்கு அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்.. குறிப்பாக நடிகர் விஜய்க்கு தெரியாமல் இப்படி நடக்குமா என்பது கேள்வி.

மெர்சல் திரைப்படம் தமிழகம் முழுதும் 500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் ஒரு தியேட்டரில் சராசரியாக 500 பேர் பார்க்கலாம் என்று வைத்துக்கொள்வோம்.

ரசிகர் மன்றம் பெயரில் டிக்கெட்

ஒரு காட்சிக்கு 2,50,000 பேர். இவர்களுக்கு தலா 1200 ரூ  30,00,00,000  ( முப்பது கோடி) ரூபாய்.

ஆக ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் முறைகேடாக ஒரு காட்சிக்கு 30 கோடி ரூபாய் புழங்குகிறது. பல ஊர்களில் இரண்டு அல்லது மூன்று காட்சிகளை மொத்தமாக ரசிகர் மன்றங்கள் எடுத்து நடத்தவதும் உண்டு. அப்படியானால் இத்தொகை இன்னமும் அதிகரிக்கும்.

ரசிகர் மன்றத்தினர்தான்  இக்காட்சிகளை எடுத்து நடத்துகிறார்கள் என்று விஜய் தரப்பில் சொல்லப்படலாம்.

ஆனால் இந்த விஜய்தான் நாளைய தமிழக முதல்வர், இந்த ரசிகர் மன்றத்தினர்தான் நாளைய அமைச்சர்கள் என்பதை நினைத்துப் பார்த்தால்.. தற்போதைய நிலையைவிட இன்னும் “சிறப்பான” எதிர்காலம் தமிழகத்துக்கு இருப்பதாகவே படுகிறது.

எதிர்கால சந்ததிகள் பாவம்!