சென்னை: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதை, ஆடியோ, வீடியோ, புகைபபடங்களின் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லஞ்சமற்ற நிர்வாகமே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடிப்படையாகும். அதனால் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், லஞ்சத்தை வேரோடு ஒழிக்கும் வகையிலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு அரசு அலுவலகத்திலும், வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட பொதுமக்கள் தயங்காமல் ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகலாம் என அரசு ஊக்கப்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசு நிர்வாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தப் போவதாக உறுதியளித்திருந்த நிலையில், போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, டாஸ்மாக் கடைகள் குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு, நேற்று அவர்கள் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, லஞ்சத்தை ஒழிக்கும் வகையில், எந்தவொரு அரசு அலுவலகத்திலும், வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட பொதுமக்கள் தயங்காமல் ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகலாம் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு அரசு அலுவலகத்திலும், வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட, பொதுமக்கள் அதனை ஆதாரத்துடன் (ஆடியோ, வீடியோ அல்லது ஆவணங்கள்) லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாராகத் தெரிவிக்கலாம். அவ்வாறு சரியான ஆதாரங்களுடன் புகார் அளித்து, ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பொதுமக்களுக்கு அரசு தரப்பில் இருந்து 1 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, ஊழல் அதிகாரிகளின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]