விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி பிரபலங்கள் பலரை ஆட்டம் போட வைத்தது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இந்த மாதம் 20 ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பிறகு பல படங்களின் பாடல் இணையவழியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் பாடல் வெளியீடு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.