‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் துவங்கி, ‘விலங்கு’ இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது ஜீ 5 நிறுவனம்

இந்நிலையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் அதிரடி திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியிடுகிறது.

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்பட இருக்கிறது.

இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வலுவான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, படம் வெளியான தொடக்க வாரத்தில் ரசிகர்களின் பாரட்டினால் பலரையும் சென்றடைந்து, நல்ல வெற்றியை பெற்றது.

தற்போது ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளதால், பெரிய திரையில் இப்படத்தை பார்க்கத் தவறிய பார்வையாளர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து மிக எளிதாக ரசிக்கலாம்.

– சோமாஸ்