தமிழக ஆளுநருடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை,

மிழக ஆளுநராக நேற்று பதவி ஏற்ற பன்வாரிலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

தமிழக கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள பன்வாரிலாலை இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் சந்திக்காத நிலையில், விஜயகாந்த் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆளுநர் மாளிகை வந்த விஜயகாந்த் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் புகார் கடிதம் கொடுத்தார்.

விஜயகாந்துடன், அவரது மைத்துனரும் துணைப்பொதுச்செயலாளருமான சுதீஷ் உடன் சென்றார்.

விஜயகாந்தின் கவர்னருடனான திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Vijayakanth's sudden meeting with Tamil Nadu Governor