பிடிவாரண்டு எதிரொலி: கோர்ட்டில் சரணடைந்தார் நடிகர் ஜெய்!


சென்னை:

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்து சரணடைந்தார்.

நடிகர் ஜெய் கடந்த மாதம்  21ம் தேதி பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது, அடையாறு அருகே அவரது கார் பிளாட்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையறிந்த அந்த பகுதி போக்குவரத்து போலீசார் காரை மீட்க சென்றபோது, அதனுள் நடிகர் ஜெய் மற்றும் அவரது நண்பரும் குடிபோதையில் காருக்குள் மயங்கி கிடந்தது தெரிய வந்தது.

அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் சொந்த ஜாமினில் விடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான  வழக்கில் ஆஜராகமால் ஜெய் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக அவரை இரண்டு நாட்களுக்குள் கைது செய்து ஆஜர் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக இன்று காலை நடிகர் ஜெய் தனது வழக்கறிஞருடன் வந்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் சரணடைந்தார்.