டில்லி போராட்டம் தடை: வழக்கு தொடர விவசாயிகள் முடிவு!

டில்லி,

லைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று தடை விதித்தது. இந்நிலை யில், தடை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.

டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் தமிழக விவசாய சங்கத்தினர் 80 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு தடை விதிக்ககோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், விவசாயிகள் போராட்டத்துக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் கூறும்போது, .  ‘நாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்த 28 நாட்கள் அவகாசம் இருக்கிறது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இன்றும்  போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே,  நாங்கள் ஜந்தர் மந்தரிலேயே தொடர்ந்து இருக்கிறோம்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  உத்தரவை எதிர்த்து விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ என்றார்.
English Summary
National green Tribunal banned for farmers Protest: farmers decide to proceed with the case!