சிவாஜி-கமல், இபிஎஸ்-ஓபிஎஸ்: விஜயகாந்தின் கிண்டல் பேட்டி

சென்னை,

மிழக ஆளுனர் பன்வாரிலாலை இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில, கவர்னர் மாளிகை எதிரே செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்  செய்தியாளர்க ளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்ததார். அப்போது அவர் கூறியதாவது,

நடிகர்த்திலகம் சிவாஜியுடன் கமல் இணைந்த நடித்தால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான், தற்போது எடப்பாடியும், ஓபிஎஸ்சும் நடிக்கிறார்கள் என்று கிண்டலாக கூறினார்.

மேலும்,புதிய ஆளுநர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது, கூட்டணிக்கு ஒரு கும்பிடு  என்று அதிரடியாக கூறினார்.

மேலும், இதுகுறித்த கேள்வி கேட்ட நிருபரிடம் நீங்கள் எந்த பத்திரிகை என்று வினவினார்.. தேர்தல் வரும் முன்பாகவே கூட்டணி பற்றி கூற முடியாது. நீங்க எந்த பத்திரிக்கைன்னு சொல்லுங்க நான் பதில் சொல்றேன் என்றார்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், அரசியல் பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு, எம்ஜிஆர் எனக்கு பிடித்த தலைவர். அவருக்காக விழா எடுப்பது நல்லதுதான், அதற்காக பள்ளி மாணவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் அரசு சரியாக செயல்படவில்லை. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுபவர்கள் காய்ச்சலை கட்டுப்படுத்தி விட்டார்களா என்றும் கேள்வி விடுத்தார்.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அழைப்பு விடுக்கப்படாததால் அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்றும்,

சிவாஜியும், கமலும் திரைப்படங்களில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததை பார்க்கிறேன். இருவரும் இணைந்து நன்றாக நடிக்கின்றனர்.

ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், அரசியலுக்கு வந்துவிட்ட என்னைப் பற்றி ரஜினி மற்றும் கமலிடம் கேளுங்கள் என தெரிவித்தார்

இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Sivaji-Kamal, EPS-OPS: Vijayakanth's tease