‘கடைசி விவசாயி’க்கு உலக அளவில் இரண்டாவது இடம்…

Must read

சர்வதேச அளவில் திரை விமர்சனம் செய்யும் இணையதளமான லெட்டர் பாக்ஸ் என்ற இணைய தளத்தில் இதுவரை இந்த ஆண்டு வெளியான படங்களில் உலகத்தரம் வாய்ந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழில் வெளியான ‘கடைசி விவசாயி’ படம் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

விவசாயத்தை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு சினிமா தனம் இல்லாமல் நகைச்சுவையுடன் எளிமையான முறையில் இயக்குனர் எம். மணிகண்டன் தான் சொல்லவந்த செய்தியை வலுவாக வெளிப்படுத்திய திரைப்படம் ‘கடைசி விவசாயி’.

விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரமாக இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

83 வயதான நல்லாண்டி தாத்தா விவசாயியாக நடித்திருந்த இந்தப் படம் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் வெளியான சிறந்த படங்களில் சர்வதேச அளவில் இந்தப் படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More articles

Latest article