தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ராவி கொண்டலா ராவ் (Raavi Kondala Rao) மாரடைப்பால் மரணமடைந்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (29/07/2020) மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 88.
ராவி கொண்டலா ராவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.