அக்ஷரா ஹாசன் பகிர்ந்த உருக்கமான தகவல்….!

Must read


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.
விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”இந்த கொரோனா காலக்கட்டத்தில் நாம் நிறைய அழகான உயிர்களை இழந்துவிட்டோம்.

‘ஷமிதாப்’ படத்தில் இருந்து என்னுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணி புரியும் எனது சகோதரர் சச்சின் தாதா (Sachin Dada) கொரோனாவால் மரணமடைந்தார். அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியான நேர்மறையான எண்ணம் கொண்டவர். மிகவும் திறமனையாவர் . மிகச்சிறந்த நண்பர்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article