ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி….!

Must read


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதுகுறித்து ராஜமெளலி அவரது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின் குணமடைந்தது. இருந்தாலும் நாங்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். இதில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் பரிந்துரைபடி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அறிகுறிகள் எதுவுமில்லாமல் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது மருத்துவர்களின் வழிமுறைகளை முறையாக பின்பற்றிவருகிறோம். குணமடைந்தவுடன் எங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து ஆன்டிபாடிகளை உருவாக்க காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article