தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் நிற்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு..

தற்போது சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தை இயக்கவுள்ளார் .

இந்நிலையில் இவர் முதன் முறையாக நடிகை காஜல் அகர்வால் , வைபவ், யோகி பாபு, கயல் ஆனந்தி மற்றும் பல நடிகர் நடிகைகள் வைத்து வெப் சீரீஸ் ஒன்று இயக்கவிருக்கிறார்.

இந்த வெப் சீரீஸிற்கு “லைவ் டெலிகாஸ்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.