https://twitter.com/MonaDarlingx/status/1222490315161915393

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் சபாக்.

இப்படம் முழுக்க முழுக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

இப்படம் ரிலீசாகும் முன் JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என சமூக ஊடக போராளிகள் போராட்டம் நடத்தி வந்தனர். #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

மேலும் சினிமா படங்கள் குறித்த இணையதளமான ஐ.எம்.டி.பியில் சப்பாக் படத்துக்கு குறைந்த ரேட்டிங்கை , ரேட்டிங் 4.6 கொடுத்தனர்.

இந்தநிலையில், ஐ.எம்.டி.பியில் ரேட்டிங் குறைந்தது குறித்து பேசிய தீபிகா, ‘அவர்களால் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கைத்தான் மாற்ற முடியும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பதிலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.