நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் போனி கபூருடன் இணைந்து ஜீ ஸ்டுடியோவும் தயாரித்து வந்தது எனவும் , ஆனால், தற்போது இந்த நிறுவனம் படத்திலிருந்து விலகியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.