சென்னை: தவெகவுடன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவார்கள் என தவெக பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆளுநர்  தவெக ஆட்சி அமைக்க தேவையான . 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில், தவெக  திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. மறைமுகமாக குதிரை பேரங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இ,த்ந நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ‘பேசும்போது, கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் விஜய் புகைப்படத்தை பார்த்துவிட்டு நம்பிக்கை யுடன் இருங்கள். எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். நேர்மையான நடந்து கொள்ளுங்கள், நல்லதே நடக்கும் என்றார்.

மேலும், திமுக கூட்டணயில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள், உறுதியாக இருங்கள், அதன்பிறகு பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமையும் என்று கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கிடையில், தவெக தலைவர்  விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு இரண்டு முறை உரிமை கோரினார்.  ஆனால்,  ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே தவெகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவுகொடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள  மற்ற கட்சிகளும், நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.  இன்று அதன் முடிவு என்ன என்பது தெரிய வரும்.

[youtube-feed feed=1]