சென்னை:  தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய +2 பொதுதேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது.  பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தேர்விலும் வழக்கம்போல,  மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ww.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக, பிளஸ்2  பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. இந்த  பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும், மாணவர்களின் வசதிக்காக அவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாகவும் மதிப்பெண் விவரங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனத் தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொதுதேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துளளது. அடுத்து,   சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதம் தேர்ச்சியுடன் 2ம் இடமும், குமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் 3வது இடமும், நெல்லை 97.54 சதவீதத்துடன் 4வது இடமும் பிடித்துள்ளன.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 489 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதாவது, அரசுப் பள்ளி மாணவர்கள் 92.16%, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 96.14%, தனியார் பள்ளிகள் மாணவர்கள் 98.72% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இருபாலர் பள்ளிகள் 95.30%, ஆண்கள் பள்ளிகள் 90.49%, பெண்கள் பள்ளிகள் 97.08% தேர்ச்சி பெற்றுள்ளனர்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதாவது, மாற்றுத்திறனாளி மாணவர்களில் 76.92% பேரும், கைதிகளில் 95.20% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி விகிதம்:

 தமிழ்- 98.96 % . தமிழ் பாடத்தில் 83 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆங்கிலம்- 98.74 %.  ஆங்கில மொழிப்பாடத்தில் 21 மாணவ, மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.

 கணிதப்பாடத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இயற்பியல்- 98.87 %, வேதியியல்- 98.82 %, விலங்கியல் – 98.69 %, கணினி அறிவியல்- 6,975,, வணிகவியல்-683,, கணக்கு பதிவியல்-1,946,, பொருளியல்- 440 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு 95.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்த அடைந்த நிலையில் இந்தாண்டு 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13ம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தேர்வு முடிவுகள்,  பள்ளியில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தோ்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் .‘வாட்ஸ் ஆப்’ மூலமும் அறியலாம்: ‘வாட்ஸ் ஆப்’ செயலி வழியாகவும் தோ்வா்கள் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் hi எனப் பதிவிட்டு பின்னா் வரும் செய்தியில் துறையின் பெயா், தோ்வா்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடா்ந்து வரும் பதில் செய்தியில் தோ்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தோ்வா்களின் தோ்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

[youtube-feed feed=1]