சென்னை: திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி என தமிழ்நாடு அரசியல் களத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், தவெக கூண்டோடு ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் திமுக-அதிமுக கூட்டணி அமைத்தால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் களம் சலசலப்பாக உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. தமிழ்நாட்டில், இதுவரை கண்டிராத ஒரு அரசியல் சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரினால், மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் இந்த முயற்சியைத் தடுக்க கட்சியின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்த வழி வகை செய்யும்.
து மீண்டும் ஒரு தேர்தலை நோக்கி மாநிலத்தைத் தள்ளக்கூடும்.
இதற்கிடையில் ஊடகம் ஒன்றுக்குபேட்டி அளித்த தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “சட்டமன்ற விதிகளின்படி எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதே முறை” என்று தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக இணைந்து வந்து பெரும்பான்மையை நிரூபித்தால், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. திமுக அதிமுக கூட்டணி ஆட்சியை திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்று பேசினார். இதனால், அரசியல் களம் மீண்டும் அனல்பறக்க தொடங்கி உள்ளது.
இதற்கு முன்பு 1979-ல் எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக – அதிமுக இணைப்பு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு, தவெக-வின் வருகையால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, இந்த இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசியல் ஒரு மிக முக்கியமான வரலாற்று மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.
[youtube-feed feed=1]