’80 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா இன்று தனது 60 வது வயதை கொண்டாடுகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1978 ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குருதி ஆட்டம்’ வரை பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ள ராதிகா சின்னத் திரையிலும் கொடிகட்டி பறக்கிறார்.

இவரது 60 வயதை கொண்டாடும் விதமாக அவரது கணவர் சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இனிய 60வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆண்டி….லவ் யூ…எங்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன்…வயது என்பது வெறும் எண் மட்டுமே அதற்கு நீங்கள் தான் ஆதாரம்” என்று பதிவிட்டுள்ளார்.