ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஜெயிலர்’.

இது ரஜினியின் 169 வது படம், இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

பீஸ்ட் படத்தை விட மாபெரும் வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சன் களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.