சென்னை: மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷ், தனது மகனின் பள்ளி நிகழ்ச்சியில் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். இந்த நிலையில், தங்களது மூத்த மகனின் பள்ளி நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். மூத்த மகன் யாத்ராவால் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் ஒன்று சேர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் தன் மூத்த மகனான யாத்ரா. இவரது பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ஸ் நிகர்ச்சியில், யாத்ரா  பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்வில் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டனர்.  பள்ளி சீருடையில் யாத்ரா யாத்ரா நிற்க,அவருக்கு அருகில் அப்பா, அம்மா, தம்பி லிங்கா, விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  தனுசின் மாமனாரும், ஐஸ்வர்யாவின் தந்தையுமான ரஜினி உள்பட பலரும் இருவரும் தங்களது இரு குழந்தை களுக்காக மீண்டும் செர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் மீண்டும் இணைய வாப்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.  வரும் நவம்பர் மாதம் தனுஷ், ஐஸ்வர்யாவின் திருமண நாள் வருகிறது. அன்றே தாங்கள் மீண்டும் சேரும் அறிவிப்வை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுமாறு மகளிடம் ரஜிடின கூறியிருக்கிறாராம். அப்பா பேச்சை கேட்டு தான் மீண்டும் தனுஷுடன் சேர முடிவு செய்திருக்கிறாராம் ஐஸ்வர்யா.