லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

வடிவேலுவின் மகளாக பாடகியும் ஸ்டார் விஜய் டி.வி. புகழ் சிவாங்கி நடித்துள்ளார்.

மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது.வைரலானது.

நேற்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது இதனை நடிகர் வடிவேலு ரசித்து பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.