அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் ஜனவரி 12 ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இரு தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அஜித்தின் புதிய லுக்குடன் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தது.

இந்த நிலையில் 2023 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி துணிவு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் குறித்து தேதியுடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கி இருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவு ‘துணிவு’க்கா ‘வாரிசு’க்கா யாருக்கு என்பது பொங்கலுக்கு தெரிந்துவிடும் என்ற நிலையில் வெற்றி தோல்வி இரண்டையும் சகஜமாக எடுத்துக்கொள்ள அனைவரும் தயாராகி வருகின்றனர்.