இண்டியானா ஜோன்ஸ் படங்களின் வரிசையில் ஐந்தாவது திரைப்படம் 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ம் தேதி திரைக்கு வருகிறது.

1981, 1984, 1989, 2008 என ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த நான்கு இண்டியானா ஜோன்ஸ் படங்களிலும் ஆக்சன் மற்றும் சாகச காட்சிகள் மூலம் உலகெங்கிலும் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாரிஸன் போர்ட்.

இண்டியானா ஜோன்ஸ் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கதாபாத்திரம் ஏற்று நடித்த ஹாரிஸன் போர்ட்-டுக்கு இப்போது 80 வயது ஆகிறது.

தற்போது இந்தப் படங்களின் வரிசையில் ஐந்தாவதாக உருவாகி வரும் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது இந்தப் படத்திற்கு இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த சீரீஸின் முதல் நான்கு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை இயக்கவில்லை.

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி படத்தை ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்குகிறார்.

ஹாரிஸன் போர்ட் படங்கள் உலகெங்கும் வசூலில் சாதனை படைத்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

இண்டியானா ஜோன்ஸ் வரிசையில் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி கடைசிபடமாக இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.