வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம் முன்னிலையில் உள்ள நிலையில், விவேக் ராமசாமி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். டிரம்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.  தற்போதுள்ள  அமெரிக்க அதிபர் பிடன் பதவிக்காலம்.  இந்த ஆண்டு (2024)  முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதாகும் விவேக் ராமசாமி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற அவர், தற்போது தொழில்முனைவோராக உள்ளார். இவரும் போட்டியில் இருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை அந்நாட்டு சட்டத்திட்டத்தின்படி,  அதிபர் தேர்தலில் வேட்பாள ராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும்.  அதன்படி,  குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

அதில், அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.  இதில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள விவேக் ராமசாமி,  அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விவேக் ராமசாமி, “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் ஒருவர் அறிவிப்பு…