நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நிக்கி ஹாலே என்பவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது  இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பர் 4ந்தேதி (2024)  அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக தன்னை களமிறக்க வேண்டும் என இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.  இந்த நிலையில், தற்போது, மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்  விவேக் ராமசாமி என்பவரும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.  அதற்கான விருப்ப மனுவும் வழங்கி உள்ளார். இவரும் குடியரசு கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஒரே கட்சியில் அதிபர் பதவிக்கு 3 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க சட்டப்படி, அதிபா் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னா், அவர் சார்ந்த குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் ராமசாமியின் பூர்விகம் கேரள மாநிலம் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோா் மனநல மருத்துவராகவும். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்குப் புலம்பெயா்ந்துள்ளனர். அமெரிக்க சின்சினாட்டியில் வசித்து வருகின்றனர்.

இந்த கேரள தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் விவேக் ராமசாமி. இவர் புகழ்பெற்ற ஹாா்வா்ட், யேல் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டப்படிப்புகளை படித்தவர். பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.4,140 கோடி) அதிகம் என்று கூறப்படுகிறது.