அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திக்கத்திற்குரிய வகையில் பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

இது சீனா அனுப்பிய உளவு பார்க்கும் பலூன் என்று அமெரிக்க உளவு மற்றும் ராணுவத் துறையினர் தெரிவித்தனர்.

மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

இந்த பலூன் சீனா-வைச் சேர்ந்தது தான் என்றும் இது காலநிலை குறித்து ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட வந்ததாகவும் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்து காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அது பறந்து சென்றதாகவும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த பலூன் தென் கரோலினா மாகாணத்தின் அட்லான்டிக் கடற்கரையை ஒட்டி பறந்த போது அமெரிக்க எப்-22 ரக போர் விமானம் மூலம் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

பொது பயன்பாட்டுக்கான தனது ஆளில்லா பறக்கும் சாதனத்தை அமெரிக்கா தனது பலத்தை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியிருப்பது சர்வதேச நடவடிக்கைகளுக்கு புறம்பானது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.