நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது… 36,361 வேட்பு மனுக்கள் ஏற்பு- மாவட்டம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 36,361 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது.  அதன் விவரங்கள்  மாநில தேர்தல் ஆணையம் மாவட்டம் வாரியாக வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல்  கடந்த ஜனவரி மாதம்  28-ம் தேதி தொடங்கியது. பிப். 4-ம் தேதியுடன்  நிறைவடைந்தது. இந்த தேர்தல்  மாநகராட்சிகளில் போட்டியிட 14,701 வேட்புமனுக்கள், நகராட்சிகளில் 23,354 வேட்புமனுக்கள், பேரூராட்சிகளில் போட்டியிட 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 5ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.  நேற்று (7ந்தேதி) வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். இதையடுத்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இதையடுத்து முன்னதாக மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article