சென்னை: நீட் விலக்கு கோரி மீண்டும்  மசோதா இயற்றும் வகையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.ரவி. ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடைபெறுகிறது. இதை நேரடி ஒளிபரப்பு செய்ய சட்டப்பேரவை செயலகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக,  நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்,  தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிப்ரவரி 8ந்தேதி (இன்று)  சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நீட் விலக்கு தொடர்பாக புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று  சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய கூட்டத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த  அதிமுக, பாஜக கட்சிகளும் பங்கேற்க உள்ளது. இதில், நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவுள்ளது.