திருச்சி:: அதிமுகவிலிருந்து  பலர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தவெகவுக்கு ஆதரவாக எடப்பாடி தலைமையிலான அதிமுக இரண்டாக பிளவுபட்டது.  இதையடுத்து பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும்  தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தவெகவில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் தனபால், மூத்த நிர்வாகி செம்மலை போன்றோர் கட்சியில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் பிளவுபட்ட அதிமுக மீண்டும் இணைந்துள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி தலைமையை ஏற்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார் என எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த  முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கட்சியில் இருந்து விலகி, இனறு , தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்த அவர், கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]