தூத்துக்குடி: நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

பாரத் ஜோடா யாத்திரை குமரி மவாட்டத்தில் செப்டம்பர் 7ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அதுதொடர்பான தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி வருகை தந்துள்ளார்.தூத்துக்குடி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் அவருக்கு ரயில் நிலையத்தில் கட்சியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, வரும் 7 ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி தனது யாத்திரையை தொடங்க உள்ளார். ராகுலின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில்  கலந்துகொள்ள தூத்துக்குடி வருகை தந்ததாக தெரிவித்தார்.

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்து இருக்கிறது. அமெரிக்க டாலர் இப்போது 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம் பாஜகவின் தவறான பொருளாதார கொள்கை தான். விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் தருவதாக மோடி சொன்னார் அதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தவறு வீழ்ச்சி இதை மக்களிடம் எடுத்து சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

பாஜக சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தி வருகிறது என செய்தியர்கள் கேள்வி எழுப்பியத்திற்கு, பாஜகவுக்கும் சுதந்திரதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள். பாஜக இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி.

ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இதுவரை 2 தடவை மட்டுமே சுதந்திர கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. ஒன்று நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, பின்னர், வாஜ்பாய் பிரதமராக சென்ற போது இப்போது கொண்டாட கூடிய காரணம் என்ன? அப்போது கொண்டாமல் இருந்த காரணம் என்ன? என பாஜகவிற்கு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.