ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் கொண்டு வரப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சி தெரிவித்துள்ளது.

‘கர்னூல்’ நீதித்துறை தலைநகராகவும், ‘அமராவதி’ சட்டமன்ற தலைநகராகவும், ‘விசாகப்பட்டினம்’ நிர்வாக தலைநகராகவும் உருவாக்க தேவையான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அக்கட்சி கூறிவருகிறது.

கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.

நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்று கூறும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திராவில் உள்ள மற்ற 25 மாவட்டங்களையும் மாநிலங்களாக அறிவித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைநகரை உருவாக்கி ஆந்திராவை ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் ஆந்திரா’ என்று அறிவிக்கலாம்.

மக்களின் கருத்து குறித்து கவலைப்படாமல் தாங்கள் நினைத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி பிரபுக்களைப் போல் செயல்பட்டு வரும் ஒய்.எஸ்.ஆர். கட்சி இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாணின் இந்த சர்ச்சை கருத்தால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.