ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ. பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த குழு.

இதில், 900 கி.மீ. பயணத்தை இன்று நிறைவு செய்தது.

தமிழ்நாட்டில் தொடங்கி கேரளா வழியாக கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த பயணத்தை காங்கிரஸ் தொண்டர்கள் தவிர, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரித்து வருவதுடன் ராகுல் காந்தியை நேரடியாக சந்தித்து வாழ்த்தியும் வருகின்றனர்.

ஒருபுறம் ராகுல் காந்திக்கு அன்பும் வரவேற்பும் பெருகிவரும் நிலையில் மறுபுறம் மோடியின் சொந்த மாநிலத்திலேயே கூடாரம் காலியாகி வருவது பாஜக-வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழையானாலும் சகதியானாலும் எந்த இன்னலுக்கும் துவண்டுவிடாமல் மதவாத பிரிவினைவாத சக்தியால் பிரிந்து கிடைக்கும் இந்தியாவை ஒற்றுமைப் படுத்துவது ஒன்றே இலக்கு என்று தனது நடைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.

இன்றைய பயணத்தின் போது முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்ற சிறுவர்களிடம் உடல் ஆரோக்கியத்தை காக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய ராகுல் காந்தி சிறுவர்களுடன் சாலையில் தண்டால் எடுத்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சித்ரதுர்கா மாவட்டம் சித்தபுரா-வில் நிறைவடைந்த இன்றைய பயணம் நாளை மீண்டும் துவங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலை அடுத்து நிர்வாகிகள் வாக்களிக்க வசதியாக அக்டோபர் 17 ம் தேதி ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.