சென்னை:
ளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகளை டிசம்பர் 7 முதல் மீண்டும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வெளி ஊர்களில் இருந்து மற்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் பற்றிய கேள்வி எழும்பியது. கல்லூரிகளில் விடுதிகளின் வசதி இல்லாமல் அவர்கள் தங்குவது எங்கே? இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை தங்க அனுமதிக்க விடுதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், தற்போதைய கல்வி ஆண்டு அதாவது, 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான துவக்கம் பிப்ரவரி 1 முதல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும்.

டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 14 முதல் கடற்கரைகளுக்கு பொது மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இடங்களும் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.