சென்னையில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது…..

Must read

 

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையில் வயது வாரியாக பாதிக்கப்பட்டிருப்போர் சதவீதம் கடந்த மே மாதம் 8 ம் தேதி இருந்த அளவே உள்ளது என்று கொரோனா தரவு ஆர்வலர் விஜய் ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று 1534 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது 19,184 பேர் சிகிச்சையில் உள்ளனர் இதில் 10 முதல் 19 வயதுடையவர்கள் 9.1 சதவீதம் பேர்.

ஒரு மாதத்திற்கு முன்பு கடந்த மே மாதம் 8 ம் தேதி சென்னையில் பாதிப்புக்கு உள்ளவர்கள் எண்ணிக்கை 6446 ஆகவும் சிகிச்சையில் இருந்தவர்கள் எண்ணிக்கை 33,068 ஆக இருந்தது, இதில் 10 முதல் 19 வயதுடையவர்கள் 6.2 சதவீதம் பேர் இருந்தனர்.

கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 10 முதல் 19 வயதுள்ளவர்களுக்கான பாதிப்பு சுமார் 3 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

More articles

Latest article