கொல்கத்தா: மணிப்பூரில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பல இளம்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெண் முதலமைச்சரான மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்திலும், பழங்குடியினத்தைச் சேர்நத் பெண் உள்பட பல பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, கொடுரமாக தாக்கப்படும் வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேற்குவங்க மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தன்னை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மீது குண்டர்களை ஏவி விட்டு அராஜகம் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி, அம் மாநிலத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள், பெண்கள் திரிணாமுல் காங்கிரசாரால் கொலை செய்யப்பட்டதுடன், பலர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர். ஆனால், அந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களை மீடியாக்களில் பகிரப்படவில்லை. ஆனால், தற்போது மணிப்பூர் சம்பவம் வெடித்த நிலையில், மேற்குவங்க மாநில அவலங்களும் அரங்கேறி வருகின்றன,.
இதுதொடர்பாக மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த பயங்கரம் குறித்து விவரித்தார். அப்போது, ‘எங்கள் மகள்கள் எந்த வெளிநாட்டிலும் வசிப்பவர்கள் இல்லை. அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள், என கண்ணீருடன் கூறினார்.
மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என குற்றம் சாட்டியதுடன், இந்த சம்பவம் அரங்கேறியதை பார்த்த போலீசார் “ஊமைப் பார்வையாளராக” இருந்தனர் என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் போன்று பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்கள் வைரலானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் கவனத்தை ஈர்க்குமா என்று கேள்வி எழுப்பியவர், மேற்கு வங்காளத்தில் “மணிப்பூர் போன்ற” சூழ்நிலை நிலவுகிறது என்று குற்றம் சாட்டி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் சட்டர்ஜியுடன் இணைந்த மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், மேற்கு வங்காளத்தில் சமீபத்திய பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட துணிந்ததற்காக தெற்கு பஞ்ச்லாவில் ஒரு பெண் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டதாகக் கூறினார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.