டெல்லி:   மக்களவை தேர்தலின் 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 7ந்தேதி (செவ்வாய்கிழமை)  நடைபெற உள்ளது. இதையொட்டில், தேர்தல் நடைபெறும்  12 மாநிலங்களில் உள்ள  94 மக்களவைத் தொகுதிகளில்  நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் என 94 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்,  1351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில் உள்ள  வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமைக்கான உரிமையைப் பயன்படுத்த தயாராக உள்ளனர்.

3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 2963 வேட்பு மனுக்கள் தாக்கல செய்யப்பட்டு இருந்தன. பரிசீலனைக்குப் பின் 1563 வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன. இறுதியில்  1351  மனுக்கள் ஏற்பட்ட நிலையில் 1351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதில், மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும்  அடங்குவர். மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.   அதிகபட்சமாக குஜராத்தின் 26 தொகுதிகளில்658 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் 11 தொகுதிகளின் 519 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

3-ம் கட்ட தேர்தல்  குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

3-ம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.   இந்த 94 தொகுதிகளிலும்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மே  7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  நாளை மறுநாள் (திங்கட்கிழமை)  தேர்தல் நடைபெற  94 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட  அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில்  தேர்தல் ஆணையம்  உள்ளது.

வாக்குப்பதிவு 7-ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.